புதுக்கோட்டை: நள்ளிரவில் கதிர் அறுக்கும் விவசாயிகள்

புதுக்கோட்டையில் இயந்திரம் கிடைக்காததால், இரவில் கதிர் அறுப்பு பணி நடைபெற்றுவருகிறது.


ஒவ்வொரு தொழிலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் சிக்கல் உருவாகும், ஆனால் விவசாயத்தில் மட்டும் விதைப்பதில் இருந்து அறுத்து விற்று காசாக்கும் வரை சிக்கல் தான்.


கதிர் அறுப்பதற்கு ஆள்கள் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் கதிர் அடிக்கும் இயந்திரம் வந்து நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தியது. தற்போது கதிர் அடிக்கும் இயந்திரத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம் கிடைக்காததால் இரவில் கதிர் அறுப்பு பணியில் ஈடுபடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, வடகாடு, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உட்பட பல பகுதியில் கதிர் அறுக்கும் இயந்திரம் கிடைக்காததால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.